Regional02

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு :

செய்திப்பிரிவு

மதநல்லிணக்க தினத்தை முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சார்பில், கல்லூரி வளாகம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களின் இச்செயலை மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார்பாடி ஆகியோர் பாராட்டினர்.

முன்னதாக, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில், கல்லூரி மூத்த பேராசிரியர் புஷ்பலதா வழிகாட்டுதலின்படி, கல்லூரி வளாகத்தில் மாணவர்களும், பேராசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் சாதி, இனம், மதம், மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவதாக உறுதிமொழி ஏற்றனர். இதில், மாணவ செயலர்கள் ரத்தின கணேஷ், சந்தீப், கிருபாகரன், அருள்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT