Regional02

ஓணம் பண்டிகை: நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி (நாளை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. அன்றயை தினம், கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல் படும்.

அதற்கு பதில், செப்டம்பர் மாதம் 11-ம் தேதி மாவட்டத்தில் முழு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT