Regional01

5 மாதங்களுக்குப் பின் விவசாயிகள் குறைதீர் கூட்டம் : கள்ளக்குறிச்சியில் 27-ம் தேதி நடக்கிறது :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வரும் 27-ம் தேதி ​முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 01.30 மணி வரை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கஉள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தைவிதிமுறைகள் மற்றும் கரோனா பொது முடக்கத்தால் கடந்த 5 மாதங்களாக விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. இடையே் கடந்த ஜூலை மாதம் இணையம் வழியே கூட்டம் நடத்தப்பட்ட போதி லும், அதில் விவசாயிகள் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT