தேனி அருகே பழனிசெட்டி பட்டியில் குழந்தைத் திருமணத் ததுக்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக மாவட்ட நிர் வாகத்துக்கு தகவல் வந்தது. சமூக நலத் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர். இதில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் ஆஜர்படுத்தினர். தேனியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் சிறுமி தங்க வைக் கப்பட்டார்.