Regional01

ஜவுளிக் கடையில் திருட முயன்றவர் கைது :

செய்திப்பிரிவு

ஜவுளிக் கடையில் பணம் திருடி தப்ப முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

குமாரபாளையம் சேலம் சாலையைச் சேர்ந்தவர் பழனியப்பன் (43). அவரது ஜவுளிக் கடையில் துணி வாங்க வந்த நபர் பழனியப்பன் கவனக்குறைவாக இருந்த சமயத்தில் கடையின் பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து தப்ப முயற்சித்துள்ளார்.

இதைக்கண்ட பழனியப்பன் கூச்சல் எழுப்பியதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த நபரை சுற்றி வளைத்துப பிடித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் ஈரோடு காசிபாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் (38) எனத் தெரியவந்தது. அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT