திருச்சி திருவெறும்பூர் அருகிலுள்ள பூலாங்குடி காலனியில் இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் மிஷினை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது அலாரம் அடித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.