கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக கூறியும் அதை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
Regional01

கடையநல்லூரில் பாஜக ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடப்பதை கண்டித்து, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியத் தலைவர் தர்மர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராமநாதன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ராமராஜ் கண்டன உரையாற்றினார். நகரத் தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT