Regional02

அகரம் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் - மேலும் 3 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்சீலன் (45) நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஏரல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடைய அகரத்தைச் சேர்ந்த ஜெபசிங் சாமுவேல், பெனித் நியூட்டன், மாரிமுத்து, ஜெபஸ்டின் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாலகிருஷ்ணன் (27), நவநீதன் (27), ரூபன் தேவபிச்சை (27) ஆகிய மூவரும் நேற்று திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாக தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT