டெல்லியில் மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை நேற்று சந்தித்த ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல். 
Regional02

கன்டெய்னர்களை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரிடம் ஏஇபிசி வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக அகில இந்திய தலைவர் ஏ.சக்திவேல், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை நேற்று டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ஏற்றுமதித் தொழில் எதிர்கொள்ளும் சிரமங்களையும், பிரச்சினைகள் குறித்து ஏஇபிசி தலைவர் சக்திவேல் விளக்கினார். குறிப்பாக, கன்டெய்னர் பற்றாக்குறை (கொள்கலன்கள்), இந்தியாவுக்கு வரும் பெரிய கப்பல்களின் பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான சரக்கு போக்குவரத்துக் கட்டண உயர்வு பற்றி விளக்கினார்.

ஒரு லட்சம் காலி கன்டெய்னர்களை உடனடியாக இறக்குமதி செய்து, பெரிய கப்பல்களில் போர்க்கால அடிப்படையில் குத்தகைக்குவிட ஏற்பாடு செய்ய வேண்டும், தளவாடங்களின் அதிக செலவை சமாளிக்க, ஓரளவு ஈடுசெய்ய சரக்கு கட்டணத்தில் மானியம் வழங்க பரிசீலிக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT