கரோனா தொற்றால் கண வரை இழந்த, ஆதரவற்ற பெண்களுடனான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகேஷ் தலைமை வகித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் களுக்கு தனியார் அமைப்புகளில் வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கான கல்விஉதவி, சுயதொழில் தொடங்குவதற்கான கடன் உதவி போன்ற பல உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஷ் உத்தரவிட்டார்.