Regional01

சிவகாசியில் கொத்தடிமைகளாக இருந்த 14 பேர் மீட்பு :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தெய்வானை நகரில் ஒரு தனி யார் பாலிபேக் நிறுவனத்தில் கொத்தடிமைகளாகக் குழந்தைத் தொழிலாளர்கள் பணி செய் வதாகத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், கடந்த மாதம் 22-ம் தேதி சிவகாசி உதவி ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் கூட் டாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த நிறுவனத் தில் கொத்தடிமைகளாகப் பணி யாற்றி வந்த ஒடிசா, சத்தீஸ்கர், பிகார் மாநிலங்களைச் சேர்ந்த சிறுமிகள், 9 சிறுவர்கள் மற்றும் 2 இளைஞர்கள் மீட்கப்பட்டனர்.

அதோடு விருதுநகர் மாவட்ட மனித வர்த்தக மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீ ஸாரால் வில்லிபுத்தூரில் சுற்றித் திரிந்த கொல்கத்தாவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார்.

அதேபோல், கர்நாடகா மாநி லம், மைசூரு நகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன், விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்தபோது அதிகாரிகளால் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் பத்திரமாக அவர்களது சொந்த ஊ்ர்களில் பெற்றோரிடம் போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT