Regional02

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் - ஆணையரை கண்டித்து தர்ணா :

செய்திப்பிரிவு

சிவகங்கை நகராட்சி அலுவ லகத்தில் ஆணையரை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் பழைய ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை புதுப்பிக்க ஆணையர் மறுப்பதாகவும், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் சாலைகளை சேதப்படுத் துவதால் மக்கள் வரிப்பணம் வீணாவதாகவும் கூறி முன்னாள் கவுன்சிலரும், அமமுக நகரச் செயலா ளருமான அன்புமணி தர்ணாவில் ஈடுப்பட்டார்.

சிறிது நேரத்தில் ஆணையர் அறையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் ஆணையர் அய்யப்பன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பத்து தினங்களுக்குள் பழைய ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை புதுப்பித்து தருவதாக ஆணையர் உறுதியளித்ததை அடுத்து, போராட்டத்தை அன்புமணி கைவிட்டார்.

SCROLL FOR NEXT