Regional02

தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம் :

செய்திப்பிரிவு

பவானிசாகர் அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.88 அடியாக இருந்தது. அணைக்குவிநாடிக்கு 1,124 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது பவானி ஆற்றில்100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT