Regional01

புகையிலை கடத்திய 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி, சோதனையிட்டனர். அதில், புகையிலைப் பொருட்கள் 57 மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது. அவற்றை கடத்திச் சென்ற ஆரியங்காவூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சத்தியமூர்த்தி (34), கல்லூத்து பகுதியைச் சேர்ந்த முருகன்(31) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT