தேவாரம் காவலர் குடியிருப்பு மாடியில் வளர்ந்துள்ள மரத்தால் ஏற்பட்டுள்ள விரிசல். 
Regional02

தேவாரம் காவலர் குடியிருப்பு மாடியில் - மரம் வளர்வதால் பலமிழக்கும் கட்டிடம் :

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், தேவாரத்தில் காவல் நிலையம் அருகே ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது.

இரண்டு அடுக்குமாடி குடியிருப்புடன் தரைத் தளத்தில் நான்கு வீடுகளும் முதல் தளத்தில் நான்கு வீடுகளும், இரண்டாம் தளத்தில் நான்கு வீடுகளும் என மொத்தம் 12 வீடுகள் உள்ளன.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்தக் குடியிருப்புகள் பராமரிப்பின்றி உள்ளன. மேலும் தண்ணீர் தொட்டி அருகே அரச மரம் வளர்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் குழாய்களை வேர்கள் உடைத்து வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இவற்றை உடனடியாக சீரமைத்து மரத்தை அகற்ற காவலர் வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸார் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT