தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறை அடுத்த திருவேதிகுடியில் வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந் தமான நஞ்சை நிலம் 2.75 ஏக்கர் வைத்திருந்த குத்தகைதாரர்கள் குத்தகை தொகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால், கோயில் நிர்வாகம் தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கோயிலுக்கு சாதகமாக வருவாய் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை தஞ்சாவூர் உதவி ஆணையர் சிவராம்குமார், ஆய்வாளர்கள் கீதாபாய், குணசுந்தரி, செயல் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் கோயில் பணியாளர்கள், 2.75 ஏக்கர் நிலத்தை குத்தகைதாரர்களிடம் இருந்து மீட்டு, கோயில் வசம் ஒப்படைத்தனர்.