Regional03

கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த வருவாய்த்துறையினர் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், தேர்தலில் பணிபுரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அச்சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில், செயலாளர் சரவணன், பொருளாளர் குமரிஆனந்தன் உள்ளிட்ட பலர் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

SCROLL FOR NEXT