Regional03

தமிழக முதல்வருக்கு - 1 லட்சம் கோரிக்கை அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சமநீதிக்கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரா.அண்ணாதுரை தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி தமிழக முதல்வருக்கு 1 லட்சம் அஞ்சல் அட்டைகள் மூலம் கோரிக்கை அனுப்பும் போராட்டத்தை தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவர் கருப்பையா தொடங்கி வைத்தார்.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் பெ.ஜெயராமன், ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் இரா.முல்லையரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT