Regional01

தரமற்ற முறையில் - நெல்லை- தென்காசி நான்குவழிச் சாலை பணி : ஆட்சியரிடம் மதிமுக புகார்

செய்திப்பிரிவு

கீழப்பாவூர் ஒன்றிய மதிமுக செயலாளர் ராம.உதயசூரியன், தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலை பணிகள் மிகவும் மோசமாக, தரமற்றதாக நடைபெற்று வருகிறது. சாலையின் முக்கிய பணியான விரிவாக்கப் பணிக்காக சாலையின் இருபுறமும் தோண்டப்படும் பள்ளங்கள் குறிப்பிட்ட அளவு ஆழம் தோண்டாமல் மேலோட்டமாக தரையை கிளறிவிட்டு அதன் மேல் மண்ணைக் கொட்டி சமன்படுத்தி வருகின்றனர். சாலைக்கான உறுதித்தன்மை கேள்விக்குறியாகிறது.

தேவையான அளவு பள்ளம் உருவாக்கி, அதில் புதிய மண்ணைக் கொட்டி இரும்பு உருளைகள் மூலம் இறுக்கமான தன்மையை உருவாக்கி, அதன் மேல் தார் சாலை அமைத்தால்தான் அது நீண்டகால பயன்பாட்டில் இருக்கும். தரமாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல ஆண்டு கள் பழமையான பாலத்தை மாற்றி புதிதாக உருவாக்குவதற்கு பதில், அதன் பக்கவாட்டில் பள்ளங்களைத் தோண்டி சிமென்ட் கான்கிரீட் அமைத்து, அதன் மேல் குழாய்களை அமைத்து, தரமற்ற முறையில் வேலை நடக்கிறது. பாலங்களையும் தரமான முறையில் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT