தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆகஸ்ட் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நாளை (ஆக.19) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்கலாம். கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். கோரிக்கை மனுக்களை ஆகஸ்ட் 19 அல்லது அதற்கு முன்னதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அவை ஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு விவசாயிகளுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.