Regional02

தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிலக்கரி கையாள்வதில் சாதனை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வஉசி துறைமுகத்தின் கப்பல் சரக்குதளம் 9-ல் கடந்த 15.08.2021 அன்று எம்.வி. ஸ்டார் லாரா என்ற கப்பலில் இருந்து 57,090 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இச்சாதனையானது இதற்கு முன்பு கடந்த 27.10.2020 அன்று கப்பல் சரக்கு தளம் 9-ல் எம்.வி. ஓசன் ட்ரீம் என்ற கப்பலில் இருந்து 24 மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 56,785 டன் நிலக்கரியை விட அதிகம்.

மார்செல் தீவு கொடியுடன் வந்துள்ள எம்.வி. ஸ்டார் லாரா என்ற பனமாக்ஸ் வகை கப்பல் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. இந்தோனேசியா நாட்டில் உள்ள முரா புரோவ் என்ற துறைமுகத்தில் இருந்து 77,675 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு வஉசி துறைமுகம் வந்துள்ளது. இக்கப்பலில் வந்த 77,675 டன் நிலக்கரியும் இந்தியா கோக் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. புதிய சாதனை படைக்க காரணமாக இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT