தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணியில் இருந்து திரேஸ்நகர் செல்லும் பகுதியில் முட்புதர்களுக்கு மத்தியில் நேற்று 2 சிலைகள் கிடந்தன. தாளமுத்துநகர் போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குசென்றுவிசாரணை நடத்தினர். கருங்கல்லால் செய்யப்பட்ட அம்மன் சிலை தலை உடைந்த நிலையில் இரு துண்டுகளாகவும், மரத்தால் ஆன பெருமாள் சிலையும் இருந்தன. இவை சுமார் 2 அடிஉயரம் கொண்டதாக இருந்தன.அம்மன் சிலைக்கு பட்டு சேலையும், பெருமாள் சிலைக்குவேட்டியும் அணிவிக்கப்பட்டிருந்தது. இவை கோயில்களில்பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கான அடையாளமாக குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. சாமி சிலைகள் எப்படி இப்பகுதிக்கு வந்தன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.