Regional01

புகையிலைப் பொருட்களை கூரியர் மூலம் வாங்கி விற்பனை : 4 பேர் கைது, 468 கிலோ பறிமுதல்

செய்திப்பிரிவு

ஈரோடு கொங்கலம்மன் கோயில் வீதியில் நகர காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஜிஜேந்திரகுமார் (36) என்பவர், தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுபோல, பிரகலாத் குமார்(22), பாரராம் (37), லட்சுமணராம் (37) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் கருங்கல்பாளையம் கோட்டையார் வீதியில் உள்ள கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.4.41 லட்சம் மதிப்பிலான 468 கிலோ புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து கூரியர் மூலம், ஈரோட்டுக்கு புகையிலை, குட்கா பொருட்களை பெற்று இங்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

SCROLL FOR NEXT