சேலம் கிழக்கு கோட்டத்தில் 13 துணை தபால் நிலையங்களில் சர்வதேச பார்சல் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறையில் வெளிநாடுகளுக்கு பார்சல்கள், கடிதங்கள் அனுப்ப பிரத்யேக சர்வதேச பார்சல் சேவை மையம் இயங்கி வருகிறது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் சர்வதேச பார்சல் சேவை ஏற்கெனவே இயங்கி வருகிறது.தற்போது, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, அழகாபுரம், கொண்டலாம்பட்டி, கொங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல், பேளூர், வாழப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட 13 துணை தபால் நிலையங்களில் சர்வதேச பார்சல் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இம்மையங்களில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு பார்சல்கள், கடிதங்கள் மிகக்குறைந்த கட்டணத்தில் அனுப்பலாம். இரவு 9 மணி வரை இந்த மையங்கள் செயல்படும். சர்வதேச பார்சல்கள் அனுப்புவது தொடர்பாக உதவி மையத்தை 86673 39788, 90033 11224 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம், என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.