Regional04

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தகம் எழுதிய - மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு :

செய்திப்பிரிவு

‘எழுதுக’ என்ற அமைப்பு சென்னையை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 100 பேர்ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் புத்தகங்களை எழுதி வெளியிட்டனர். இப்புத்தக வெளியீட்டு விழா கடந்த ஜூலை 31-ம் தேதி நடைபெற்றது. இந்த புத்தகங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

புத்தகங்களை வெளியிட்ட 100 மாணவர்களில் 18 பேர் காஞ்சிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 18 பேரும் நேற்று ஆட்சியர்ஆர்த்தியை சந்தித்து, தங்கள்புத்தகங்களை ஆட்சியரிடம் காட்டிவாழ்த்து பெற்றனர். அவர்களைப் பாராட்டிய ஆட்சியர் தொடர்ந்து எழுதும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று வாழ்த்தினார்.

SCROLL FOR NEXT