Regional02

மாணவியருக்கு வாலிபால் பயிற்சி :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் சார்பில் 'பிட் இண்டியா' திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கான 5 நாள் வாலிபால் பயிற்சி முகாம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்டோ ரூபன் தலைமை வகித்தார். தூய மரியன்னை கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி குழந்தை திரேஸ் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை வஉசி துறைமுக வாலிபால் வீரர் ஜுடு ரஞ்சித் தொடங்கி வைத்து பேசினார். முகாமில் 40 மாணவியர் பங்கேற்றனர். தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரவிகாந்த் பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை தூய மரியன்னை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கிறிஸ்டி செய்திருந்தார்.

SCROLL FOR NEXT