Regional01

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து மறியல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதியினருக்கு கடந்த சில மாதங்களாகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என வும், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பால்பண்ணை அருகே பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். திருக்கோகர்ணம் போலீஸார் சமாதா னம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

SCROLL FOR NEXT