Regional01

கோரிக்கை அட்டையுடன் வருவாய்த்துறை ஊழியர்கள் :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசு ஊழியர் களுக்கான அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு வழங்கியதுபோல், தமிழகத்திலும் அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி,வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணியாற்றினர். திருநெல்வேலி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களும், ஊழியர்களும் கோரிக்கை அட்டை அணிந்திருந்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி சரண்டர் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் திருமலை முருகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சலீம் முகமது மீரான் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி

SCROLL FOR NEXT