Regional01

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், திருவந்திபுரம், நடுவீரப்பட்டு, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, சேத்தி யாத்தோப்பு, லால்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் அண்ணா விளையாட்டரங்கில் மழை தண்ணீர் குளம் போல தேங்கியது. சாலைகளில் மழை தண்ணீர்ஆறுபோல ஓடியது, தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது.

புவனகிரியில் 56 மில்லிமீட்டர், சிதம்பரத்தில் 52.80, கடலூரில் 44.80, குறிஞ்சிப் பாடியில் 43 , பரங்கிப்பேட்டையில் 30, பண்ருட்டியில் 28, சேத்தியாத்தோப்பில் 17, காட்டுமன்னார்கோவிலில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது.

SCROLL FOR NEXT