Regional01

மூதாட்டியை ஏமாற்றி நகை அபகரிப்பு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த வர் செல்லம்மாள் (68). இவர், கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது, மற்றொரு மூதாட்டி அறிமுகமாகியுள்ளார்.

அப்போது, தனது மகன் வட்டாட்சியராக வேலை பார்ப்ப தாகவும், அவரிடம் பேசி, முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருவதாகவும் கூறி, திருநெல்வேலிக்கு அழைத்து வந்து செல்லம்மாளிடம் 3 பவுன் நகையை வாங்கிக்கொண்டு தப்பிவிட்டார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT