Regional01

அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் : பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருநெல்வேலியில் நேற்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை பாஜக தொண்டர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி யோடு கொண்டாடினர். உலக அரங்கில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக உழைத்து வருகிறார். வேளாண்மை, தொழில்துறை உட்பட அனைத் திலும் வேகமாக நாடு முன்னேற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் சில விடுதலைப் போராட்ட வீரர்களின் மணிமண்டபங்களில் வரலாற்றுத் தகவல்கள் சரியாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விடுதலைக்காக போராடிய அனைத்து வீரர்களின் வரலாறுக ளையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களது மணிமண்டபங்களில் சரியாக பதிவிடுவது அரசின் கடமை ஆகும். பாஜக சார்பில் மாநில அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்போம். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். அதிக இடங்களில் எங்கள்கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

கோவில்பட்டி

SCROLL FOR NEXT