விழுப்புரம் நகரில்அரசின் 100 நாள் சாதனை குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கும் திமுகவினர். 
Regional02

தமிழக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்து - விழுப்புரத்தில் திமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம் :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் மக்களுக்கு செய்த பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து விழுப்புரத்தில் திமுகவினர் துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்தனர். வீதி, வீதியாக சென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயாளர் சக்கரை, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், தொண்டரணி கபாலி, மாணவரணி வினோத், பொதுக்குழு உறுப்பினர் பஞ் சநாதன், நகர துணை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT