கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த தீர்த்தம் கிராமத்தில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்விக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எஸ்ஐ சந்துரு தலைமையிலான தனிப்படை போலீஸார், தீர்த்தம் கிராமத்தில் சிறப்பு சோதனை நடத்தினர்.
அப்போது, அதே கிராமத்தில் வசிக்கும் பசவராஜ் (42) மற்றும் அவரது மாமியார் அஞ்சம் மாள் (எ) குள்ளம்மாள் (51) ஆகியோர் வீட்டில் 14 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் பசவராஜ் உட்பட 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1.40 லட்சம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.