செங்கம் அருகே பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு பாட புத்தகங்களை வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார். 
Regional02

பள்ளியில் இடை நின்ற : மாணவிக்கு மீண்டும் கல்வி :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. அதன்படி, செங்கம் வட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது. சென்னசமுத்திரம் கிராமம் அழகாபுரி நகர் பகுதியில் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது. சதீஷ் மகள் சமிக் ஷா, 5-ம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அதே கிராமத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் மாணவியை 6-ம் வகுப்பில் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் சேர்த்துள்ளார். பின்னர், அவருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு எடுத் துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

SCROLL FOR NEXT