கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மருதுபாண்டியர் கோட்டை 
Regional02

அரண்மனை சிறுவயலில் பழமை மாறாமல் - மருதுபாண்டியர் கோட்டை புதுப்பிப்பு :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், கல் லல் அருகே அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

கல்லல் அருகே அரண் மனை சிறுவயலில் பழங்காலக் கோட்டை உள்ளது. இக் கோட்டை சிவகங்கையை ஆண்ட சசிவர்ணத்தேவர் வம்சத்தவரால் கட்டப்பட்டது.

கி.பி. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் மருது சகோ தரர்கள் படையுடன் இந்தக் கோட்டையில் தங்கி ஆங்கிலேயருடன் போர் புரிந் துள்ளனர். இதனால், இந்தக் கோட்டையை மருது பாண்டி யர் கோட்டை என்றே அழைக் கின்றனர்.

தொல்லியல்துறையின் பராமரிப்பில் உள்ள இக்கோட்டை சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.60.31 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்கு சுண் ணாம்பு, மணல், கடுக்காய், கருப்பட்டி கலவையை பயன் படுத்தி உள்ளனர். இதற்காக கழுகு மலையில் இருந்து சுண் ணாம்பு, கொள்ளிடம் காவிரி ஆற்றில் இருந்து மணல், ராஜ பாளையத்தில் இருந்து சித்துக்கல் வரவழைக்கப்பட்டது.

தற்போது பணிகள் முடிந்து புதுப்பொலிவுடன் காணப்படும் இக்கோட் டையை வரலாற்று ஆர்வ லர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT