Regional01

100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சிகளுக்கு நாமக்கல் ஆட்சியர் பாராட்டு :

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய கிராமங்களைப் பாராட்டும் வகையில், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பைல்நாடு, ஆயிபாளையம், குண்ணமலை, இருட்டணை, டி.கவுண்டம்பாளையம், மரூர்பட்டி, சிவியம்பாளையம், தொ.கவுண்டம்பாளையம், சிக்கநாயக்கன்பாளையம், பல்லக்குழி, பழந்தின்னிப்பட்டிபுதூர், மின்னக்கல், போக்கம்பாளையம், புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த கிராமங்களைப் பாராட்டும் வகையில், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜ்மோகன், துணை இயக்குநர் எஸ்.சோமசுந்தரம் உட்பட மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT