திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் அதிகளவிலான இருசக்கர வாகனங்கள் திருட்டு போயின. இச்செயலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கைது செய்வதற்காக டிஎஸ்பி ஆர்.பிருந்தா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்லப்பா, தலைமைக் காவலர் இளங்கோவன் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அதில், மருங்காபுரி அருகேயுள்ள ஊத்துக்குளியைச் சேர்ந்த கார்த்திக்கேயன்(23) இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீஸார், ஊத்துக்குளி உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்த 17 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கார்த்திகேயனை மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.