தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலையம் அருகே வசித்து வந்தவர் ரகுநாதன் மகன் ராஜேஷ்குமார்(45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கங்காதேவி, தனது 2 குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் கழுகுமலை அருகே துரைச்சாமிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றி ருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் ராஜேஷ்குமார் வீட்டுக்குள் படுத்திருந்தார். அப்போது, 2 இருசக்கர வாக னங்களில் வந்த 4 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, ராஜேஷ்குமாரை அரி வாளால் வெட்டிக் கொன்று விட்டு, தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த எஸ்.பி ரவளிப்பிரியா காந்தபுனேனி அங்கு சென்று, விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மெலட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.