Regional01

எம்.ஆர். பாளையத்தில் உலக யானைகள் தினம் :

செய்திப்பிரிவு

உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆக.12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான யானைகள் மறுவாழ்வு மையத்தில் நேற்று பொங்கல் வைத்து, படையல் செய்து, யானைகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், யானைகள் விரும்பி உட்கொள்ளும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, யானைகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், வன கால்நடை மருத்துவர் ஏ.சுகுமார், உதவி வனப் பாதுகாவலர் சம்பத்குமார், மறுவாழ்வு மைய வனச் சரக அலுவலர் முருகேசன் மற்றும் பல்வேறு வனச் சரக அலுவலர்கள், களப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT