திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே, ஏஐடியுசி திருப்பூர்மாவட்ட சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் கரோனா பெருந்தொற்று காலம் மற்றும் ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய மருத்துவப்பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் அரசு ஊக்கத்தொகை வழங்கியதைப்போல, தூய்மை பணியாளர்களுக்கும் உடனே வழங்க வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் நிரந்தரத் தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.