Regional02

ஆரம்ப, நடுநிலை பள்ளிகளை - சுழற்சி முறையில் திறக்க வேண்டுகோள் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்டசெயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ந.மகாலட்சுமி தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் அலோசியஸ் துரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தீனதயாளன், மாவட்ட செயலாளா் சீனுவாசன், பொருளாளா் ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சுழற்சி முறையில் ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும், பள்ளிகளைத் திறப்பதற்கு முன் ஆசிரியர்களின் பொது மாறுதல், கலந்தாய்வை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும், பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி 11சதவீதத்தை வழங்க வேண்டும், பள்ளியில் புதியதாக சேர்ந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்கள், உலர் உணவுகளை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப ஆசிரியர் நியமனத்தை உடனடியாக செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT