Regional01

கரோனா விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சி நிர்வாகம், அரசு கிளை நூலக பொதிகை வாசகர் வட்டம், இந்திய செஞ்சிலுவை சங்க அம்பாசமுத்திரம் கிளை சார்பில், கரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசகர் வட்ட தலைவர் பா. வல்சகுமார் தலைமை வகித்தார். கிளை நூலகர் பே.குமார் வரவேற்றார். நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், வடமலைசமுத்திரம் புனித மரியன்னை மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் எம்.எஸ்.மணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வாசகர் வட்ட பொருளாளர் மு. இளங்கோ நன்றி கூறினார்.

சதக்கத்துல்லா அப்பா கல்லூரி:

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி கிராம மேம்பாட்டு திட்டம் மூலம் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் முகக்கவசம், கிருமிநாசினி வழங்கும் நிகழ்ச்சி பர்கிட்மாநகரில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முஹம்மது ரில்வான், மேலாளர் முகம்மது ராசிக் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT