Regional02

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - நகை பாலீஷ் மோசடி: காவல்துறை எச்சரிக்கை :

செய்திப்பிரிவு

திருக்கோவிலூர் அருகே உள்ள கருணா செட்டிதாங்கல் கிராமத்தில் வீராசாமி மனைவி வள்ளி (60) என்பவரிடம் பைக்கில் வந்த மர்மநபர்கள், நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி, 3 பவுன் செயின் மற்றும் அரை பவுன் மோதிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து, மணலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு சம்ப வங்கள் அரங்கேறியிருக்கும் சூழ லில், மாவட்டக் காவல்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் நகை பாலீஷ் போடுவதாக வரும் மர்ம நபர்களிடம் நகைகளை கொடுத்து ஏமாற வேண்டும். அனைவரும் தங்கள் வீட்டின் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

தோஷம் கழிப்பதாகக் நபர்களையும் வீட்டினுள் அனுமதிக்க வேண்டாம், சந்தேகப் படும்படியான நபர்கள் குறித்து 100 என்ற காவல் நிலைய தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT