திருப்பத்தூர் அருகே சிராவயல் புதூரில் வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள். 
Regional02

வீட்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயல் புதூர் சுப்ரமணியன் என்பவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. சுப்ரமணியன் குடும்பத்தினர் வீட்டை விட்டு தப்பி ஓடினர்.

தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி தலைமை யிலான வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், மலைப்பாம்பை மதகுபட்டி அருகே மண்மலைக்காட்டில் விட்டனர்.

SCROLL FOR NEXT