திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
அந்தக் கடையில் பான் மசாலா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, கடையின் உரிமையாளரின் வீட்டில் ஆய்வு செய்து, 125 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு தொடர்வதற்காக சட்டப்பூர்வ 6 உணவு மாதிரி எடுக்கப்பட்டு, அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.