Regional02

பப்ஜி விளையாட்டில் முன்விரோதம் - இளைஞர் கொலையில் 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

மன்னார்குடியில் பப்ஜி விளை யாட்டின்போது ஏற்பட்ட முன்விரோத தகராறில் இளைஞரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர்பிச்சை மகன் இஸ்ரத்(22). இவர் மன்னார்குடியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி பாலிடெக்னிக் படித்து வந்தார். இவருக்கும் நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த வாஹித்(23) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பப்ஜி விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மன்னார் குடிக்கு வந்த வாஹித் மற்றும் அவரது நண்பர்கள் தீன்ஹனீஸ்(20), மர்ரூஜ்(22), அக்பர் பாஷா(22) ஆகியோர் இஸ்ரத்திடம் சமாதானம் பேசுவதாகக் கூறி, மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில், இஸ்ரத்தை 4 பேரும் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த இஸ்ரத் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மன்னார்குடி போலீஸார் அங்கு சென்று இஸ்ரத்தின் உடலை கைப் பற்றினர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4 பேரையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT