Regional01

அடிப்படை வசதிகள் கேட்டு தி.மலை ஆட்சியருக்கு கோரிக்கை :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் 10-வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி ஆட்சியர் பா.முருகேஷிடம், வார்டு உறுப்பினர் சற்குணராஜ்பாண்டியன் நேற்று முன் தினம் மனு அளித்துள்ளார்.

அம் மனுவில், “வேங்கிக்கால் ஊராட்சி 10-வது வார்டில் உள்ள பகுதிகளில் அடிப்படை வசதியை செய்து கொடுக்க முடியவில்லை. எனது 10- வார்டுபகுதி புறக்கணிக்கப்படுகிறது. எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி, உயர் அதிகாரியை கொண்டு கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் இணைப்பு, தெரு விளக்குகள், நூலக வசதி, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பாலகிருஷ்ணா நகரில் உள்ள 5 வீதிகள், இந்திரா நகர் மேற்கு, அன்னை நகர், வானவில் நகரில் உள்ள முதல் 5 வீதிகள், கனேஷ் நகர் ஆகிய பகுதி களில் சாலை வசதி மற்றும் கால்வாய் வசதியை செய்து கொடுக்க வேண்டும். இந்தப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT