வேலூர் மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொடு உணர் வுடன் கூடிய வாசிப்பு கருவி பெறு வதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட் டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிப்பு கருவி வழங்கப்பட வுள்ளது. இதற்காக, பார்வையற்ற மாற்றுத்திறன் கொண்டவர்களில் இளநிலை மற்றும் முதுநிலை கல்வி முடித்தவர்களும், மாணவ, மாணவிகளும் உரிய படிவத்தை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண் டும். மேலும், விண்ணப்பத்துடன் மாற் றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், புகைப்படம், இளநிலை கல்வி முடித்த சான்று, முதுநிலை கல்வி படிப்பதற்கான சான்று, ஆதார் அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.