Regional01

பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் பி.லிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.எப். தொழிற்சங்க மாநிலச் செயலாளர் காதர்மொய்தீன், மதிமுக வேல்முருகன், ஏஐடியூசி வீராச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்புத் துறையை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை தெற்குவாசலில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் எச்எம்எஸ் மாநில துணைத்தலைவர் வி.பாதர்வெள்ளை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நந்தாசிங், தொமுச சி.கருணாநிதி முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் ராஜசேகர், சிஐடியூ செயலாளர் ஜி.ராஜேந்திரன், மதொச செயலாளர் மகபூப்ஜான், டிடிஎஸ்எப் செயலாளர் செண்பகம், டியூசிசி செயலாளர் சிவபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

SCROLL FOR NEXT