Regional01

பழநியில் வேட்டைக்கு சென்ற 6 பேர் கைது :

செய்திப்பிரிவு

பழநி அருகே தொப்பம்பட்டி சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை கீரனூர் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்தது. காரில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சியில் இருந்து பழநி அருகே உள்ள வனப்பகுதியில் வேட்டையாடச் செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து காரில் வந்த முருகன்(39), மாணிக்கம்(40), சத்யராஜ்(40), ஏழுமலை(37), ராமச்சந்திரன்(39), சீனிவாசன்(60) ஆகியோரை கைதுசெய்த போலீஸார், நாட்டுத் துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT